Home சினிமா பென்ஸ் படத்தில் லியோ கனெக்ஷன்.. படத்தில் இணையும் மூன்று நடிகைகள்!

பென்ஸ் படத்தில் லியோ கனெக்ஷன்.. படத்தில் இணையும் மூன்று நடிகைகள்!

0

பென்ஸ் 

லோகேஷ் கனகராஜ் LCU என்கிற யூனிவெர்ஸ் உருவாக்கியுள்ளார். கைதி, லியோ, விக்ரம் ஆகிய படங்கள் இதில் அடங்கியுள்ளது.

மேலும் தற்போது இந்த யூனிவெர்சில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படமும் இணைந்துள்ளது. லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பென்ஸ்.

சின்ன வயசுல நிறைய தப்புகள் பண்ணியிருக்கிறேன்.. பாடகர் கிரிஷ் ஓபன் டாக்

இப்படத்திற்கு இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் நிவின் பாலி வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இதற்கான அறிவிப்பு வீடியோ வெளிவந்தது.

LCU

இந்த நிலையில், பென்ஸ் திரைப்படத்தில் லியோ கனெக்ஷன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து மடோனா செபஸ்டியன் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும், அதனால் லியோ கனெக்ஷன் பென்ஸ் படத்தில் உள்ளது என கூறுகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பிரியங்கா மோகனும் இணைத்துள்ளார் என்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version