Home இலங்கை குற்றம் வவுனியா பொலிஸாரால் மூவர் கைது

வவுனியா பொலிஸாரால் மூவர் கைது

0

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில்
சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர், லெப்டொப், கைத்
தொலைபேசி, தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

அதில் தொலைபேசி, லெப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்தில் இருந்த போது
அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களும் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, 32,28,21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது
செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/three-arrested-by-vavuniya-police-1751304535

NO COMMENTS

Exit mobile version