யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் நேற்றைய தினம் கைதாகியுள்ளனர்.
போதைப்பொருள் மீட்பு
குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்
நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 90
மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை குருநகர் பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
