Home இலங்கை குற்றம் இளைஞர்களை தாக்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்

இளைஞர்களை தாக்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்

0

Courtesy: Sivaa Mayuri

கொழும்பின் புறநகர் வத்தளை, பமுனுகம பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகக் கூறி பிரதேசவாசிகள் குழுவொன்று நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

வைத்தியசாலையில் அனுமதி

இந்த இரண்டு இளைஞர்களும் பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து தங்க நகையை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்

எவ்வாறாயினும், குறித்த இளைஞர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என உறுதியளிக்கும் அதே வேளையில், இந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரிகள் கொடூரமான முறையில் தாக்கியதாக பெற்றோர்களும் கிராம மக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தநிலையில் துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டில், தாக்கப்பட்டவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version