இலங்கையில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் (India) இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை மேற்கொள்ளல்
33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு (Police Media) தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
