Home உலகம் மூன்று முக்கிய இஸ்ரேலியர்களை தூக்கிலிட்டது ஈரான்

மூன்று முக்கிய இஸ்ரேலியர்களை தூக்கிலிட்டது ஈரான்

0

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

“கொலைகளை நடத்த” ஈரானுக்குள் உபகரணங்களை கடத்த முயன்றதற்காகவும் அவர்கள் குற்றவாளிகள் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுடன் தொடர்பு 700 பேர் கைது

இஸ்ரேலுடன் “ஒத்துழைத்ததாக” தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களில் இட்ரிஸ் அலி, அசாத் ஷோஜாய் மற்றும் ரசூல் அகமது ரசூல் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

12 நாள் மோதலின் போது இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 700 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக அரசு நடத்தும் நூர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version