யாழ் (Jaffna) செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இருந்து புதிதாக மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த என்புத்தொகுதிகள் நேற்றையதினம் (31) அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் மூன்று முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணிகள்
செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 26 ஆவது நாள் நேற்று (31)
முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், நேற்றையதினம் (31) அகழ்ந்து எடுக்கப்பட்ட மூன்று எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 105
எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில்
118 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
