Home இலங்கை சமூகம் இலங்கையில் உள்ள மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகளுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையில் உள்ள மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகளுக்கு ஏற்பட்ட நிலை

0

இலங்கையில் உள்ள மூன்று முக்கிய தேசிய மருத்துவமனைகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரந்தர பணிப்பாளர்கள் இன்றி இயங்கி வருவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனை மற்றும் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய மருத்துவமனை ஆகியவையே பணிப்பாளர்கள் இன்றி இயங்கும் வைத்தியசாலைகள் ஆகும்

இரண்டு மருத்துவமனைகளை மேற்பார்வையிடும் ஒரு பணிப்பாளர்

தற்போது, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையை, லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையின் பணிப்பாளராகவும் இருக்கும் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க மேற்பார்வையிட்டு வருகிறார்.

துணை பணிப்பாளர் (டிடிஜி) பதவிகளுக்கான நேர்காணல்கள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், சீரான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனை பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்கள் மிக முன்னதாகவே நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

NO COMMENTS

Exit mobile version