பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பை பேணி வந்த மூன்று அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இதன்போது, குற்ற கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று முன்னாள் அமைச்சர்கள் பற்றிய தகவல்களே வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை
இதுவேளை, கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சுமார் 30 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பாதாள உலக நடவடிக்கைகள் குறித்து மேலும் பல விவரங்களை வெளிப்படுத்த காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
