Home இலங்கை குற்றம் கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைக்காவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்

கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைக்காவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்

0

அம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்காவலர்கள் மூவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், சிறை அத்தியட்சகரின் அனுமதி இன்றி சிறைக்காவலர்கள் கைதிகளை வெளியில் அழைத்து வந்திருந்த நிலையில் குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 

தேடும் பணிகள்

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சிறைக்காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தப்பிச் சென்ற கைதிகளில் மூன்று பேர் தற்போதைக்கு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், எஞ்சிய கைதியைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version