Home இலங்கை அரசியல் கொழும்பில் தேர்தல் களத்தில் போட்டியிடும் இலங்கையின் பிரதமர்

கொழும்பில் தேர்தல் களத்தில் போட்டியிடும் இலங்கையின் பிரதமர்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

 

பிரதமராக சத்தியப்பிரமாணம்

இந்த நிலையில் கொழும்பில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் பெரும் வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புள்ள, திறமையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அணியை, களமிறங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான  ஹரினி அமரசூரிய, 2024 ஆம் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சஜித் பிரேமதாசவும்

இதற்கிடையில் புதிய அரசாங்கத்துக்கு போட்டியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதுடன், இதற்கான வேட்புமனு தாக்கலின் இறுதிநாளாக ஒக்டோபர் 11ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version