Home இலங்கை குற்றம் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்

0

இலங்கையில் (Sri Lanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள்
அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் மட்டக்களப்பு (Batticaloa) பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும்
அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட 3
நபர்கள் தனுஷ்கோடிக்கு அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம்
அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தஞ்சம் 

இதனையடுத்து ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மரைன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மரைன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல் – ஆஷிக், ருசாத்

Source: https://tamilwin.com/article/three-sri-lankan-refugees-in-india-1713783876

NO COMMENTS

Exit mobile version