யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 25 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (15.11.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதான மூவரும் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
போதைத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
