Home இலங்கை சமூகம் குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர் கைது

குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர் கைது

0

முல்லைத்தீவு  – குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ்
மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல்
செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்டபோது பொலிஸார்  மூவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல்
திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

 இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிஸ் நிலையம் சென்று கலந்துரையாடியுள்ளதுடன்,
தமிழ்மக்கள் தமது பயிற்செய்கை நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும் சுதந்திரம்
மறுக்கப்படக்கூடாதெனவும், இத்தகைய அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக
நிறுத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலைப்குதி

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்குதியில் தமது வயல்காணிகளை பண்படுத்தும்
நடவடிக்கையில் ஈடுபட்ட சாமித்தம்பி ஏகாம்பரம், சிறீரத்தினம் கஜரூபன், வரதன்
இளமாறன் ஆகிய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்கல் இடப்பட்ட பகுதிகளுக்குள் பண்படுத்தல்
செயற்பாடு மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த மூவரும்
கைதுசெய்யப்படுள்ளனர்.

இந்தவிடயத்தினை அறிந்தவுடன் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ்நிலையத்திற்கு
வருகைதந்து, கைதுசெய்யப்பட்ட மூன்று பேருடனும் கலந்துரையாடியிருந்தேன்.

அத்தோடு பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடியதில், தமக்கு வவுனியாவில்
இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், தொல்லியல் திணைக்களத்தின்
பகுதிக்குள் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபட்டதற்காகவே தம்மால் குறித்த
மூவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்தார்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version