Home உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! மூவர் உயிரிழப்பு:பலர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! மூவர் உயிரிழப்பு:பலர் காயம்

0

அமெரிக்காவின் (America) ஆர்கன்சாஸ் மாநிலத்தின் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் போது மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு காவல்துறையினர் உட்பட 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை

இதேவேளை, காயமடைந்த சந்தேகநபர் தற்போது காவல்துறையினரின் கண்காணிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 துப்பாக்கி சூட்டு தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

 அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் என்ற அமைப்பு, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இதுவரை 234 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 21 பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/three-were-killed-in-gun-shoot-in-america-1719073065

NO COMMENTS

Exit mobile version