Home உலகம் அமெரிக்கவின் நாசகாரக் கப்பல்களை சிதைத்த ஹவுதி: பகிரங்கமாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

அமெரிக்கவின் நாசகாரக் கப்பல்களை சிதைத்த ஹவுதி: பகிரங்கமாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

0

செங்கடல் மற்றும் அரபிக்கடலில் அமெரிக்காவிற்கு (US) எதிராக இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யேமனின் (Yemen) ஹவுதி கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

தாக்குதல்கள்

அதன் போது, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, செங்கடலில் உள்ள இரண்டு அமெரிக்க நாசகாரக் கப்பல்களை பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி சிதைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எச்சரிக்கை

இந்த நிலையில், காசா மற்றும் லெபனான் மீதான அமெரிக்க ஆதரவு போர்கள் முடிவடையும் வரை இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று சாரீ எச்சரித்துள்ளார்.   

எவ்வாறாயினும், ஹவுதிக்களின் இந்த தாக்குதல் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

NO COMMENTS

Exit mobile version