Home இலங்கை சமூகம் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் முச்சக்கரவண்டி சாரதிகள்

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் முச்சக்கரவண்டி சாரதிகள்

0

அரசாங்கம் வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக வேலை செய்யவதற்கான உரிமங்களை வழங்க தீர்மானித்து வருகிறது. இது உள்ளூர் ஓட்டுநர்களின் வருமானத்தைப் பாதிக்கிறது மற்றும் நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மற்றும் தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று அவர்கள் நடத்திய ஊடவியலாளர் மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

வருமானம் சூறையாப்படுதல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,  Uber, PickMe போன்ற செயலி நிறுவனங்கள் சட்டவிரோதமான மற்றும் முறைகேடான விதிகளை பயன்படுத்தி முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் வருமானத்தை சூறையாடுகிறது.

அத்தோடு முச்சக்கரவண்டியின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஏழு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா மதிப்புள்ள ஒரு முச்சக்கரவண்டி இப்போது, சுமார் 19 இலட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகின்றது. 

முன்பு 75 சதவீதமாக இருந்த குத்தகை வசதிகளும் தற்போது 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது புதிய முச்சக்கரவண்டி ஒன்றை வாங்கி தொழிலில் ஈடுபடுவதை கடினமாக்கியுள்ளது. 

இன்று, முச்சக்கர வண்டி தொழில் துறையில் முறைசாரா சட்டங்கள், குறைந்த வருமானம், வாகன விலைகள், குத்தகை சிக்கல்கள் மற்றும் வெளிநாட்டு உரிமங்கள் போன்ற சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

46 ஆண்டுகளாக சட்டம் இல்லாமல் பணியாற்றுவதால், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் பாதுகாப்பு, வருமானம் மற்றும் உரிமைகளை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.   

 

NO COMMENTS

Exit mobile version