Home இலங்கை குற்றம் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை: இளைஞன் கைது

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை: இளைஞன் கைது

0

கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை, கெட்டபுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே நேற்று(04) திங்கட்கிழமை இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மாராம வீதி பிரதேசத்தில்
கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி இரவு கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகள்

கொழும்பு, மாதம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version