Home இலங்கை குற்றம் வெளிநாட்டு பெண்களிடம் மிரட்டி பணம் பறித்த சாரதிகள் அதிரடி கைது

வெளிநாட்டு பெண்களிடம் மிரட்டி பணம் பறித்த சாரதிகள் அதிரடி கைது

0

நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் பயணச் செலவுகளுக்காக அதிக கட்டணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் என தெரியவந்துள்ளது.

அதிக பணம்.. 

நாட்டை சுற்றிப் பார்ப்பதற்காக வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து, இருவரும் செலுத்த வேண்டிய தொகையை விட, அதாவது ரூபா10,000 மற்றும் ரூபா30,000ஐ விட அதிகமாக மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version