Home இலங்கை பொருளாதாரம் முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு : வெளியான தகவல்

முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு : வெளியான தகவல்

0

மேல் மாகாணத்தில் (Western Province) சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்படுகின்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ளது.

கட்டணக் குறைப்பு 

எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாய் படியும் குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/three-wheeler-fares-are-reduced-western-province-1720509339

NO COMMENTS

Exit mobile version