Home இலங்கை சமூகம் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

0

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல்
போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை
நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட
மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த (13) ஆம் திகதி  இரவு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கம் உடைய முச்சக்கரவண்டியே
காணாமல் போய் உள்ளதாக நேற்று (14) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை

குறித்த
முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.
இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு
பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர்
விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் 0672229222 என்ற
தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்
தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version