Home இலங்கை சமூகம் கொழும்பு புறநகர் பகுதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பு புறநகர் பகுதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

0

கொழும்பு(Colombo)  புறநகர் பகுதி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நுகேகொடை நகரத்தில் இன்று (28.03.2025) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

மேலும், குறித்த விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து இன்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலி பென்ன பகுதியில் இந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version