Home சினிமா தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

0

தக் லைஃப்

மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் 1987ல் வெளிவந்த திரைப்படம் நாயகன். பல முன்னணி இயக்குநர்களின் inspiration-ஆக இப்படம் இருக்கிறது.

இப்படியொரு மாபெரும் வெற்றியை தந்துவிட்டு இருவரும் அதன்பின் இணைந்து படம் பண்ணாமல் இருந்த நிலையில், 38 ஆண்டுகள் கழித்து இணைந்து எடுத்துள்ள திரைப்படம்தான் தக் லைஃப்.

இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு முதல் முறையாக நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ப்ரீ புக்கிங்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் சமீபத்தில் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், இதுவரை இப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/thug-life-movie-pre-booking-box-office-1748487340

NO COMMENTS

Exit mobile version