Home இலங்கை சமூகம் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.இந்த தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

தபால் நிலையத்தில் வாக்காளர் அட்டைகளை பெறலாம்

இதன்படி தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணைய வழி மூலம் சரிபார்க்க வசதி 

கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்தது எனத் தெரிவித்துள்ள பிரதி தபால்மா அதிபர், வாக்காளர் அட்டைகளை சனிக்கிழமை (21) பிற்பகல் வரையிலும் தபாலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.  

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்காளர் அட்டைகளை சரிபார்க்கவும், வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளவும் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கிணங்க, தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேருநர் பதிவு விபரம் தேடல் மூலம் வாக்களர் அட்டைகளை பார்வையிடலாம்.

வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.   

NO COMMENTS

Exit mobile version