Home சினிமா ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் தக் லைஃப்.. இதுவரை இத்தனை கோடியா

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் தக் லைஃப்.. இதுவரை இத்தனை கோடியா

0

தக் லைஃப்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் கமலுடன் முதல் முறையாக சிம்பு இணைந்து நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. தனுஷ் மேடையில் ஆவேச பேச்சு!

ப்ரீ புக்கிங்

உலகெங்கும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 12 கோடி வசூல் ஆகியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இது தக் லைஃப் படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான துவக்கம் ஆகும்.

NO COMMENTS

Exit mobile version