Home இலங்கை அரசியல் துணுக்காய் பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சி

துணுக்காய் பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சி

0

முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு
இன்று(26) துணுக்காய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தவிசாளர் தெரிவு

இதன்போது, 13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம்
செந்தூரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவ குமார் சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர்களாக முன்மொழிக்கப்பட்ட நிலையில்
பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி
சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும் சுயேட்சைக்குழுவின் ஊசி
சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலமை வகிக்க தமிழரசுக்
கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் ஐக்கிய மக்கள் சக்தியின்
சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற
ஒரு உறுப்பிரினதும் ஆதரவுடன் 06 வாக்குகளையும் சி. சிந்துஜன் 05
வாக்குகளையும் பெற்று தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன் தவிசாளராக
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version