Home அமெரிக்கா டிக் டொக் செயலிக்கு கால அவகாசம் வழங்கிய ட்ரம்ப்

டிக் டொக் செயலிக்கு கால அவகாசம் வழங்கிய ட்ரம்ப்

0

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக் டொக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த காலத்தில் ஜோ பைடன் அரசு இந்த செயலிக்கு தடை விதித்தது.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக் டொக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தற்காலிகமாக டிக்டொக் செயலியின் சேவை

இந்நிலையில், டிக் டொக் செயலிக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீடிப்பு செய்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும், அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் நடைமுறையில் உள்ள நிலையில் தற்காலிகமாக டிக்டொக் செயலியின் சேவையை நிறுத்துவதாக முன்னதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version