Home இலங்கை அரசியல் கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் – கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா

கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் – கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா

0

உதய கம்மன்பிலவின் சிங்கள பௌத்தவாதம் தற்போது காணாமல்
போயுள்ளது என்று மக்கள் விடுதலைணியின் பொதுச் செயலாளர்
ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் ஏன் கலக்கமடைய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் (Galle) நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்பு
காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிள்ளையானை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அனுமதி கோரினார்.

அவர் முன்னர் 
ஜனாதிபதியாக பதவி வகித்ததற்காக
சட்டத்துக்கு முரணாக செயல்பட இடமளிக்க முடியாது. நாட்டில் சட்டம்
அனைவருக்கும் பொதுவானதாகவே
உள்ளது.

இவ்வாறான நிலையில் பிள்ளையானுடன் பேசுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலையாக வில்லை

இதன்பின்னர் பிள்ளையானை சந்திப்பதற்கு உதய கம்மன்பில அனுமதி கோரியுள்ளார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் பிள்ளையான் சார்பில்
தான் சட்டத்தரணியாக முன்னிலையாகுவதாகக் குறிப்பிட்டு பிள்ளையானை
சந்தித்துள்ளார்.

பிள்ளையான் சார்பில் முன்னிலையாவதாக உதய கம்மன்பில குறிப்பிடுகிறார்.
உதய கம்மன்பில சட்டத்தரணியாக
இருக்கலாம்.

ஆனால் அவர் எந்த வழக்குக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. நாட்டு மக்கள் இதனை நன்குஅறிவார்கள். 

சிங்கள – பௌத்த வாதம் இனவாதம்

பிள்ளையானை கைது செய்தவுடன் ரணில் விக்ரமசிங்க உதயகம்மன்
பில ஆகியோர் கலக்கமடைந்துள்ளனர்.

உதய கம்மன்பில கடந்த காலங்களில் சிங்கள – பௌத்த வாதம் இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே
அரசியல் செய்தார். 

அத்தகையவர் பிள்ளையான் தேசிய வீரன் என்று புகழ் பாடுகிறார். அவரின் தேசிய அரசியல் தோல்வியடைந்துள்ளது.

கடந்த கால குற்றங்களின் பின்னணியில் அரசியல் பின்னணிகள் பல உள்ளன என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version