நிறைவேற்றப்பட்ட புதிய மின்சாரச் சட்டத்தின்படி மின்சார சபை ஊழியர்கள் 12 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal)தெரிவித்தார்.
ஊழியர்களுக்கு விருப்பமான நிறுவனத்தை தேர்வு செய்ய நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவரும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை
அதற்காக பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தை தேர்வு செய்ய ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய மின்சாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
தமிழர் பகுதியில் மக்கள் காணிகளை ஆக்கிரமிக்க திட்டம்: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நகர்வு
நிதித்துறை ஊழியர்களின் வேலைகள் ஆபத்தில்
பன்னிரண்டு புதிய நிறுவனங்களுக்கும் தனித்தனி நிதித் துறைகள் இருப்பதால், மின்சார சபையின் முக்கிய தலைமையகத்தில் உள்ள நிதித் துறை ஊழியர்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை: சட்ட நடவடிக்கையை கோரும் செந்தில் தொண்டமான்
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை இன்னும் அரசாங்கத்தின் கீழ் இருப்பதாகவும் அது எவருக்கும் விற்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
