Home இலங்கை பொருளாதாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: சிறிலங்கா அரசுக்கு பாராட்டு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: சிறிலங்கா அரசுக்கு பாராட்டு

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போ (Gilbert F. Houngbo ) சிறிலங்கா அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் (Manusha Nanayakkara) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்திக் கொள்கையைப் பின்பற்றியமைக்காகவும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்: கணக்கெடுப்பில் வெளியான தகவல்

மகப்பேறு பலன்கள்

இந்நிலையில், தொழில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான மாநாடு (C155), வீட்டுப் பணியாளர்கள் மாநாடு (C189), மற்றும் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல் (C190) ஆகியவற்றை அங்கீகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

குறிப்பாக, தொழில் இழப்பு ஏற்பட்டால் சலுகைகள், மகப்பேறு பலன்கள் மற்றும் பணியிட விபத்துகளுக்கான காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கி ஆரம்பிக்கப்படவுள்ள சமூக பாதுகாப்பு அமைப்பு பற்றி அமைச்சர் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

உயர்மட்ட குழு

இதன்போது, தேசிய தொழிலாளர் சந்தை தகவல் முறைமை மற்றும் தொழிலாளர் சந்தையின் மீட்பு மற்றும் உத்திகளை கண்காணித்து செயற்படுத்துவதற்கு அமைச்சுக்களுக்கு இடையேயான உயர்மட்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிலாளர் சந்தையை இலக்காகக் கொண்ட திட்டத்திற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு முழு ஆதரவை வழங்கும் என்று பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போ உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீள ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்: ஒதுக்கப்படவுள்ள மில்லியன் கணக்கிலான நிதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

NO COMMENTS

Exit mobile version