Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து

0

சிறிலங்காவில் (Sri Lanka) இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் (Presidential Election) முடிவுகள் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கருத்து வெளியிட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு (President’s Media Division) தெரிவித்துள்ளது.

“எதிர்வரும் அதிபர் தேர்தல் முடிவுகள் நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது“ என அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.

நேற்று (11) காலை பத்தரமுல்லையில் பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் ரணில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசை

இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் மக்கள் திருப்தியடைந்தால், அந்த முறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இல்லையேல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டில் மருந்துகளை விநியோகிக்க முடியாமல் மக்கள் தவிக்க நேரிடும் எனவும் உரங்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் அவதிப்படுவார்கள் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

ரணிலை கடவுளாக்கிய நபர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு: ரணில் விடுத்துள்ள உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version