Home இலங்கை சமூகம் மூதூரில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து

மூதூரில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து

0

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவமானது  இன்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக திருப்பியதால் கல்
ஏற்றி வந்த கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில், கனரக வாகனச் சாரதி
சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

இதனையடுத்து, வாகனத்தில் ஏற்றி வந்த கல் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version