119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க
அதிகாரிகள் பயணித்த திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பு ஜீப் திருடப்பட்டுள்ளது.
ஜீப்பைத் தேட விரிவான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு
தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
முன்னதாக, 119 க்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க நான்கு பொலிஸ் அதிகாரிகள்
அடங்கிய குழுவொன்று சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஜீப்பின் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, அனைத்து பொலிஸ்
அதிகாரிகளும் முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றுள்ளனர்.
அந்த நேரத்திலேயே, குறித்த ஜீப் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
