Home இலங்கை சமூகம் தமிழர்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை தடுக்க புதிய நகர்வு: துரைரெட்ணம் குற்றச்சாட்டு

தமிழர்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை தடுக்க புதிய நகர்வு: துரைரெட்ணம் குற்றச்சாட்டு

0

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள
பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகுவதாக  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இரா. துரைரெட்ணம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

தமிழர்களின் வீதாசாரம்

“கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீதாசார அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில்
ஒரு பிரதிநிதியும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதியும், மட்டக்களப்பு
மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகள் உட்பட 6 தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை
ஏதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அப்போது தான்
தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும்.

எனவே குறிப்பாக புதிய இளைஞர் சமூகம், படித்த சமூகம். சுமூகசேவையில் நாட்டம்
கொண்ட அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12
குழுக்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிடப் போகின்றனர் அதில் தமிழ் தேசியத்தில்
நாட்டமில்லாத அனைவரும் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள
பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக போட்டியிட தயாராகிக்
கொண்டிருக்கின்றனர்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version