பாடசாலை மாணவர்களிடையே புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான சிகரெட்டுகளை மாணவர்கள் பாவிப்பது ஆபத்தானது என காலி தேசிய வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
சுவாச நோய்கள்
இந்நிலையில் புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில், மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் எனவும் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சன்ன டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்,மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.