Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட சடுதியான மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட சடுதியான மாற்றம்

0

கொழும்பு பங்குச் சந்தையின்(CSE) அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (04) பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 13,511.73 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

 விலைச் சுட்டெண்

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் வளர்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இது என கூறப்படுகின்றது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.2 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/today-all-share-price-index-hits-record-high-1733315093

NO COMMENTS

Exit mobile version