Home உலகம் தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்

தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்

0

குழந்தைகள் அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விடயத்தில் இருந்து ஒதுங்கி விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

தொலைபேசியில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடத்தை மாற்றம்

இதேவேளை நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் தொலைபேசி மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது.

இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு

இதுதவிர, தொடர்ந்து தொலைபேசி பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொலைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹோர்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக (Stanford University) ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் (UK) உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version