Home முக்கியச் செய்திகள் உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் சடுதியாக குறைவடைந்த விலை நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது.

இன்றைய (26.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,115 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 220,150. ரூபாவாக பதிவாகியுள்ளது.

 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,230 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 192,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விலை நிலவரம்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 194,250 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/today-gold-price-chart-in-sri-lanka-world-market-1735194273?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version