2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை தொடர்பில் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த விண்கல் மழையானது இன்று(03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் எனவும் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விண்கல் மழை
மேலும், இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தின் இறுதியில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை பார்வையிட இலங்கை மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.