Home முக்கியச் செய்திகள் சபையில் அமைதியின்மை : நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட அமர்வுகள்

சபையில் அமைதியின்மை : நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட அமர்வுகள்

0

புதிய இணைப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (19) காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் மோதல் தொடர்பில் விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகள் நேரம் ஒதுக்குமாறு கோரியதைத் தொடர்ந்து நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாததால் நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

இன்றைய (18.06.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 5.00 வரை வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன் 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/2MuwlBn9u2Y

NO COMMENTS

Exit mobile version