Home இலங்கை சமூகம் நாட்டில் காற்றின் தரம் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் காற்றின் தரம் குறித்து மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (25) காற்றின் தரம் மிதமான நிலையில்  காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று காற்றின் தரம் 40 – 78 இற்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம்

அத்தோடு, அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நேரங்களாக குறிப்பாகக் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் மாத்திரம் காற்றின் தரம் சீரான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version