Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று (18.01.2025) இரவு முதல் பெய்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, அம்பாறை (Ampara) மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நீர்ப்பாசனத் திணைக்களம்

எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயா குளத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக தந்திரிமலையிலிருந்து கீழ்பகுதியில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version