Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு

0

நாளை ஆரம்பமாகவிருக்கும் 2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் இன்று (16 ) விடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளர்.

பரீட்சை முறைகேடு

அத்தோடு, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகைத்தருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு வேண்டுகோள் 

மேலும், தேவையற்ற பொருட்களைத் பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் அவர் சிறப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, இவற்றை மீறினால், அது பரீட்சை குற்றமாகக் கருதப்பட்டு, அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், இதன் விளைவாக 5 ஆண்டுகள் பரீட்சை தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version