Home விளையாட்டு ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

0

அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ 2024 (EURO) கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் (Spain) அணியிடம் ஜெர்மனி (German) தோல்வியடைந்ததையடுத்து அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஜெர்மனி அணி

இதனையடுத்து, ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தோமஸ் முல்லரும் (Thomas Muller) அனைத்துலக காற்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், பயர்ன் மியூனிக் அணியுடன் மேலும் ஒரு பருவத்தில் விளையாடுவதற்காக தோமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version