மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் (Pakistan) லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும்.
இந்நிலையில், லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசமான காற்றின் தரம்
மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அத்துடன், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
இதனால், மக்கள் முகக்கவசம் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பயிர் எச்சங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி, குப்பை, எண்ணெய் அல்லது டயர்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை வளிமண்டலத்தில் நுழைகிறது.
இதன் தாக்கம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் பருவத்தின் இறுதி வரை இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.