Home சினிமா தென்னிந்திய சினிமாவில் யார் பணக்கார நடிகர்.. ரஜினியா? விஜய்யா? பாலகிருஷ்ணாவா?

தென்னிந்திய சினிமாவில் யார் பணக்கார நடிகர்.. ரஜினியா? விஜய்யா? பாலகிருஷ்ணாவா?

0

சொத்து மதிப்பு

திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்களின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் இணையத்தில் வெளிவரும். அதை நாம் அவ்வப்போது செய்திகளாக பார்ப்போம்.

ஆனால், அதில் யார் அதிக சொத்துகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார், பணக்கார நடிகராக வலம் வருபவர் யார் என்பதை பற்றி எப்போதாவதுதான் தகவல் வெளியாகும்.

அப்படி தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகராக யார் இருக்கிறார், டாப் 10 லிஸ்டில் யார் யாரெல்லாம் இடம்பிடித்துள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

இதில் தமிழ் சினிமாவில் இருந்து யார் யாரெல்லாம் இடம்பிடித்துள்ளார்கள்? முதலிடத்தில் யார் இருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க.

பணக்கார நடிகர்கள்

முதலில் 10வது இடத்தில் இருப்பவரை பார்க்கலாம். மலையாள நடிகர் மோகன்லால் 10வது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 427 கோடி ஆகும்.

9வது இடத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 451 கோடி.

8வது இடத்தில் ஜூனியர் என்டிஆர் இடம்பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 463 கோடி.

7வது இடத்தில் அல்லு அர்ஜுன் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 485 கோடி ஆகும்.

6வது இடத்தில் தளபதி விஜய் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 630 கோடி.

5வது இடத்தில் நடிகர் மோகன் பாபு உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 680 கோடி.

4வது இடத்தில் பாலகிருஷ்ணா இருக்கிறார். இவர் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 710 கோடி ஆகும்.

3வது இடத்தில் ராம் சரண் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1360 கோடி.

2வது இடத்தில் சிரஞ்சீவி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1620 கோடி.

முதலிடத்தை நடிகர் நாகர்ஜூனா பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 3500 கோடி ஆகும். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version