Home சினிமா தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் லிஸ்ட் இதோ.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் லிஸ்ட் இதோ.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

0

வாழ்க்கையில் இசையை விரும்பாத மனிதர்கள் இங்கு மிகவும் குறைவு தான். அந்த இசையை தன் வாழக்கையோடு இணைத்து மாபெரும் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக அன்று வலம் வந்தவர் இளையராஜா. இவருடைய இசையை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவை தனது இசை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த நிலையில், அதிக சம்பளம் வாங்கி வரும் இசையமைப்பாளர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

முதலில் இருப்பவர் அனிருத் :

தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தமிழில் 3, டேவிட், எதிர்நீச்சல் போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர். அதை தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற அனிருத் கைவசம் தற்போது தமிழில் வேட்டையன், விடாமுயற்சி, ஜெயிலர் 2, இந்தியன் 3, எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன. இவர் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

ஏ.ஆர்.ரகுமான் :

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஏ.ஆர்.ரகுமான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் சமீபத்தில் ராயன், அயலான், லால் சலாம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு இவர் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா :

இவர் மங்காத்தா, பையா, மாரி- 2 போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். தற்போது இவர் இசையமைப்பில் விஜய் நடித்த கோட் படம் வெளியாக உள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவர் ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி அளவில் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version