Home சினிமா லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் பிரபல நடிகர்.. அட்டகாசமான அப்டேட்

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் பிரபல நடிகர்.. அட்டகாசமான அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.

லோகேஷ் தன்னுடைய படங்களின் மூலம் ஒரு தனி சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளார். அவரின் ‘கைதி’ தொடங்கி கடைசியாக வெளியான லியோ வரை அனைத்துமே இந்த LCUவில் அடங்கும்.

சூர்யா 45 எப்படி இருக்கும்? பிரபலம் உடைத்த ரகசியம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

அட்டகாசமான அப்டேட் 

இந்நிலையில், லோகேஷ் தயாரிப்பில் தற்போது, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில்  ராகவா லாரன்ஸ், பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் LCUவில் ஒரு பகுதியாக உள்ளது.

தற்போது, இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான க்ளூ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version