Home ஏனையவை வாழ்க்கைமுறை கற்றாழையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

கற்றாழையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

0

பலர் தற்போது வீடுகளில் கற்றாழை செடிகளை வளர்த்து வருகின்றனர். எனினும், இதன் நன்மைகளை யாரும் பெரிதும் அறிந்திருப்பதில்லை. 

அழகு, ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் கற்றாழை, உணவு மற்றும் பானமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னோர்கள் இதன் நன்மைகளை அறிந்து சரிவர பயன்படுத்தியிருந்தாலும், தற்போதைய தலைமுறையினர் அதன் முழு நன்மைகளை அனுபவிக்க தெரியாது இருக்கின்றனர்.

கற்றாழை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட கற்றாழை ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்கிறது.

இந்த கற்றாழையானது அதன் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் நீரை தக்க வைக்க கூடிய பண்புகளை கொண்டுள்ளது.

மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோ அமிலங்கள் கற்றாழைகளில் உள்ளன.

இதை தவிர விட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

பயன்கள்

தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும்பச்சை எனப் பலவிதமாக கற்றாழை இருந்தாலும் முதிர்ந்தவையே மருத்துவத்தன்மை நிறைந்தவை.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷமாக கற்றாழை கருதப்படுகிறது.

அழகுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிக்க கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் பெரிதும் பயன்படுத்தப்டுகிறது.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்க உதவுவதோடு சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ நலன்கள்

கற்றாழை பானம் பல நோய்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதேவேளை, உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.

அத்துடன், மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் ஆகியவையும் கற்றாழை பானத்தை பருகுவதனூடாக சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version