Home இலங்கை அரசியல் இலங்கையை வந்தடைந்தார் சீனாவின் உயர்மட்டத் தலைவர்

இலங்கையை வந்தடைந்தார் சீனாவின் உயர்மட்டத் தலைவர்

0

டித்வா பேரழிவு ஏற்பட்ட நிலையில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சீனாவின்தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) நேற்று(16) இலங்கைக்கு வருகை தந்தார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வாங் டோங்மிங்கை வரவேற்றார்.

வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை வந்துள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version